நிலக்கரி அமைச்சகம்
உள்ளூர் வளர்ச்சியில் நிலக்கரி சுரங்கங்களின் பங்களிப்பு
प्रविष्टि तिथि:
03 DEC 2025 4:53PM by PIB Chennai
ஜார்க்கண்டில் உள்ள மகத் மற்றும் அம்ரபாலி சுரங்கங்கள் 2024-25-ம் ஆண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தியில் சுமார் 50% பங்களிக்கின்றன, இதன் மூலம் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையின் கீழ் மின்சார உற்பத்திக்கான உறுதியான நிலக்கரி விநியோகத்தின் தேசிய நோக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த சுரங்கங்கள் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவு மூலம் உள்ளூர் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
நம்சிக் நாம்புக் நிலக்கரி சுரங்கம் ஆண்டுக்கு 0.2 மில்லியன் டன் நிலக்கரியை வழங்குவதன் மூலம் அருணாச்சலப் பிரதேசத்தின் எரிசக்தி பாதுகாப்பிற்கு கணிசமாக பங்களிக்கும். இந்த சுரங்கம் சுமார் 270 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், ஆண்டுக்கு ரூ.173 கோடி வருவாயை ஈட்டும்.
இந்த மூன்று நிலக்கரி சுரங்கங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் இந்திய அரசின் தற்சார்பு இந்தியா முயற்சியுடன் ஒத்துப்போகின்றன, இதன் மூலம் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவை ஆதரிக்கின்றன.
இந்தத் தகவலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198222®=3&lang=1
***
(Release ID: 2198222)
AD/BR/KR
(रिलीज़ आईडी: 2198710)
आगंतुक पटल : 23