பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலாச்சாரத் திருவிழா ஆந்திரப்பிரதேசத்தில் தொடங்கியது.

प्रविष्टि तिथि: 04 DEC 2025 8:44AM by PIB Chennai

ஆந்திரப்பிரதேச பழங்குடியினர் நலன் உண்டு உறைவிடக் கல்வி நிலைய சங்கம் மூலம் 6-வது தேசிய ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின், கலாச்சாரம் மற்றும் எழுத்தறிவு திருவிழா மற்றும் கலாச்சார விழாவிற்கு பழங்குடியின மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதை ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் வட்டேஸ்வரத்தில் உள்ள கே எல் பல்கலைக்கழகத்தில் மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் திரு ஜூவல் ஓரம் முறைப்படி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு நடைபெறும் திருவிழா பழங்குடியின இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டி இந்திய பழங்குடியின சமூகத்தின் பரந்த அளவிலான பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது. இத்திருவிழாவில் 35-க்கும் மேற்பட்ட கலாச்சார, எழுத்தறிவு, கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்க வகை செய்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தேசிய அளவிலான அறிமுகத்தையும் வாய்ப்புகளையும் அளிக்கிறது.  இந்நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்களை ஒருங்கிணைத்து  அச்சமூகத்தினரின் ஒற்றுமை, திறமை மற்றும் கலாச்சார வெளிப்பாட்டை எடுத்துரைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198546&reg=3&lang=1  

----

AD/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2198660) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu