சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குளிர்கால காய்ச்சல்: சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆய்வு

प्रविष्टि तिथि: 02 DEC 2025 6:30PM by PIB Chennai

குளிர்காலத்தில் வழக்கமான பரவும் சளிக் காய்ச்சலை  (இன்ஃப்ளூயன்ஸா)  எதிர்கொள்ளும் தயார்நிலை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா தலைமையில் உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

சுகாதாரத் துறைச் செயலாளர், இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலும் என இரண்டு முறை இந்தக் காய்ச்சலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்பதை அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம்  மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்  அதிகாரிகள், தற்போது உலக அளவிலும் இந்தியாவிலும் காய்ச்சலின் தாக்கம் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தனர். புழக்கத்தில் உள்ள வைரஸ்கள் H3N2 மற்றும் H1N1 போன்ற வழக்கமான வகைகள்தான் என்றும், அசாதாரணமான போக்கு எதுவும் இல்லை என்றும் உறுதிப்படுத்தினர்.

மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்கவும், சுகாதார மையங்களில் தொடர்ந்து ஒத்திகை பயிற்சிகளை  நடத்தவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197755&reg=3&lang=1

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2198191) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi