நிதி அமைச்சகம்
வரி வெளிப்படைத்தன்மைக்கான உலகளாவிய மாநாடு: நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
02 DEC 2025 8:37PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் , வரி நோக்கங்களுக்காகத் தகவல் பரிமாற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான 18வது உலகளாவிய மாநாட்டை புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
இந்த மாநாட்டில், நிதி அமைச்சர் பேசுகையில், ரகசியத்தன்மையின் பிடியில் இருந்த உலக நிதிச் சூழல் இப்போது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புள்ள நிர்வாகம் ஆகியவை அத்தியாவசியமாகக் கருதப்படும் நிலைக்கு மாறிவிட்டது என்றார்.
வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களைத் தடுக்க, வெளிப்படைத்தன்மைக்கான சர்வதேச தரநிலைகளைச் செயல்படுத்துவதில் உலகளாவிய மன்றம் முக்கியப் பங்காற்றுகிறது என்று கூறினார்.
தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைக் குறிப்பிட்ட அவர், நடைமுறைகள் மீதான மதிப்பை நிலைநாட்டி, விவேகத்துடன் புதுமைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மாநாடு, சர்வதேச ஒத்துழைப்பு மூலம் பொதுவான பார்வையை அடைதல் என்ற கருப்பொருளின் கீழ் டிசம்பர் 2 முதல் 5 வரை நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197884®=3&lang=1
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2198080)
आगंतुक पटल : 3