பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இ-கிராம ஸ்வராஜ் செயலி

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2025 3:31PM by PIB Chennai

கிராம பஞ்சாயத்துகளால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், பட்ஜெட் மதிப்பீடு, கணக்கியல், பணி மேலாண்மை மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை வழங்குவதன் மூலம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனைக் கொண்டுவருவதே இ-கிராம ஸ்வராஜ் செயலியின் நோக்கமாகும்.

பஞ்சாயத்துகளால் செயல்படுத்தப்படும் பணிகளைக் கண்காணிப்பதில் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். பணிகளை அடையாளம் காணுதல், புவி-குறியிடுதல், முன்னேற்ற அறிக்கையிடல், நிதி கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டு வாரியான அறிக்கைகளை உருவாக்குதல் போன்ற அம்சங்கள் மூலம் பஞ்சாயத்து பணிகளின்  நிகழ்நேரக் கண்காணிப்பிற்கு செயலி வழிவகை செய்கிறது. இ-கிராம ஸ்வராஜ்  தகவல் பலகை மற்றும் செல்பேசி இடைமுகம் மூலம் பஞ்சாயத்து தகவல்களை பொதுமக்கள் அணுகுவதன் மூலம் இந்த அமைப்புமுறை வெளிப்படைத்தன்மையை எளிதாக்குகிறது.

இந்தத் தகவலை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், இன்று (02 டிசம்பர் 2025) மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197541&reg=3&lang=1

 

(Release ID: 2197541)

****

AD/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2197938) வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR