உள்துறை அமைச்சகம்
தேசிய புலனாய்வு முகமை
प्रविष्टि तिथि:
02 DEC 2025 3:23PM by PIB Chennai
மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008-ன் கீழ் மத்திய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட அமலாக்க அமைப்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு, மாநில பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவுகள், சர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பான விஷயங்கள் போன்றவற்றை பாதிக்கும் குற்றங்களை இந்த முகமை விசாரித்து வழக்குத் தொடுக்கிறது.
தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் / அச்சுறுத்தும் குற்றங்களைத் தடுப்பது, விசாரிப்பது மற்றும் வழக்குத் தொடுப்பது போன்ற பொறுப்புகளை திறமையாக நிறைவேற்றும் அதே வேளையில், என்ஐஏ-வை உலகத் தரம் வாய்ந்த புலனாய்வு நிறுவனமாக மாற்றும் நோக்கத்துடன், பல்வேறு நடவடிக்கைகள் / முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு பாதகமான எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக இந்திய அரசு 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை' பராமரிக்கிறது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பல்வேறு அமைப்புகள் மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் விதிகளின்படி, மத்திய அரசு தொடர்ச்சியான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், விடுதலைப் புலிகள் இயக்கம், சிமி, உல்பா உள்ளிட்ட 23 அமைப்புகளை சட்டவிரோத கும்பல்களாக அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இன்று (02 டிசம்பர் 2025) இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197532®=3&lang=1
***
AD/PKV/SH
(रिलीज़ आईडी: 2197838)
आगंतुक पटल : 7