சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் மருத்துவர் – மக்கள்தொகை விகிதாச்சாரம் 1:811-ஆக உள்ளது: மத்திய அமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ்
प्रविष्टि तिथि:
02 DEC 2025 4:38PM by PIB Chennai
நாட்டில் தற்போது 13,86,150 பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவர்கள் உள்ளனர். ஆயுஷ் அமைச்சகம் அளித்த தகவலின்படி, ஆயுஷ் மருத்துவத்தில் 7,51,768 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.
நாட்டின் மருத்துவர் – மக்கள்தொகை விகிதாச்சாரம் 1:811 ஆக உள்ளது. உலக சுகாதார அமைப்பு ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்று பரிந்துரைத்துள்ள நிலையில், இந்தியாவின் விகிதாச்சாரம் சிறப்பாக உள்ளது. நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டு 387-லிருந்து தற்போது 818-ஆக அதிகரித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 51,348-லிருந்து 1,28,875 ஆகவும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் 31,185-லிருந்து 82,059 ஆகவும் அதிகரித்துள்ளது.
2025 மார்ச் 31 நிலவரப்படி, நாட்டில் 42.94 லட்சம் செவிலியர்கள் உள்ளதாக இந்திய செவிலியர் குழுமம் தெரிவித்துள்ளது.
இத்தகவலை மாநிலங்களவையில்இன்று (02 டிசம்பர் 2025) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197614®=3&lang=1
***
AD/PKV/SH
(रिलीज़ आईडी: 2197833)
आगंतुक पटल : 4