உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இணையவழி பாதுகாப்பு உள்கட்டமைப்பு

प्रविष्टि तिथि: 02 DEC 2025 3:24PM by PIB Chennai

இணையவழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அரசு நாடு தழுவிய  ஒருங்கிணைந்த அமைப்பை நிறுவனமயமாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின்  கீழ் உள்ள தேசிய இணையவழி பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்  பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறார்.  அதே நேரத்தில் இந்திய இணையவழி  குற்ற ஒருங்கிணைப்பு மையம்,  குற்றங்களை ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள முறையில் கையாள்கிறது.

தகவல் தொழில்நுட்ப  சட்டம், 2000 இன் பிரிவு 70B இன் விதிகளின் கீழ்சைபர் பாதுகாப்பு சம்பவங்களுக்கு பதிலளிப்பதற்கான தேசிய நிறுவனமாக இந்திய கணினி அவசரநிலை பொறுப்புக் குழு  நியமிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அச்சுறுத்தல் தணிப்புக்காக பல்வேறு துறைகளில் உள்ள அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக  ஒரு தானியங்கி  நுண்ணறிவு பரிமாற்ற தளத்தை இயக்குகிறது. இது இணையவழி  பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிய வகை செய்கிறது.

31.10.2025 வரைஇணையவழி குற்றங்கள் தொடர்பான சுமார் 12,952  வழக்குகளில் தேசிய இணையவழி தடயவியல் ஆய்வகம்  மாநிலங்களுக்கு  தனது சேவைகளை வழங்கியுள்ளது.

2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய  குற்றத் தடுப்பு  திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இணையவழி  தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் கீழ்மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.131.60 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. 33 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இணைய தடயவியல் மற்றும் பயிற்சி ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

உள்துறை  இணை அமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197529&reg=3&lang=1

***

AD/PVK/ SH

 


(रिलीज़ आईडी: 2197827) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Telugu