PIB Headquarters
தொழிலாளர் சீர்திருத்தங்களும் ஐடி துறையும்: வளர்ச்சி மற்றும் நலனுக்கான ஒரு நவீன கட்டமைப்பு
प्रविष्टि तिथि:
02 DEC 2025 1:45PM by PIB Chennai
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையின் ஒரு முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக, இந்தியா உலகளாவிய தகவல் தொழில்நுட்ப (ஐடி) மையமாக மாறியுள்ளது. இது உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் சேவைகள், டிஜிட்டல் தீர்வுகள், வணிக செயல்முறை அவுட்சோர்சிங் (பிபிஓ) ஆகியவற்றை வழங்குகிறது.
இந்தியாவில் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்களுக்கான அடித்தளத்தை உருவாக்க, ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை உறவுகள் சட்டம், 2020, சமூகப் பாதுகாப்பு சட்டம், 2020, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல்கள் சட்டம், 2020 ஆகியவை இயற்றப்பட்டுள்ளன அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை இவை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஐடி துறையைப் பொறுத்தவரை, இந்தச் சீர்திருத்தங்கள் ஊதியங்கள், நிலையான கால வேலைவாய்ப்பு, வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் மற்றும் பணியிடப் பாதுகாப்பு தரநிலைகள் குறித்து தெளிவை வழங்குவதால் அவை குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்தச் சட்டங்கள் ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைத் திறமையாக நிர்வகிக்க உதவுகின்றன, அதே நேரத்தில் ஊழியர் நலனைப் பாதுகாக்கின்றன.
ஐடி துறை குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுவது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது, திறன் மேம்பாடு, புதுமை, தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197479®=3&lang=1
***
AD/PVK/SH
(रिलीज़ आईडी: 2197746)
आगंतुक पटल : 10