ஜவுளித்துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ், 7 பூங்காக்களுக்கு ஒப்புதல் – மத்திய இணையமைச்சர்
प्रविष्टि तिथि:
02 DEC 2025 2:54PM by PIB Chennai
ஜவுளித்துறையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஏற்றுமதிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்கும் அமைச்சகம் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஜவுளி உற்பத்தி மையங்களில் நவீன உள்கட்டமைப்பு உலகத்தரம் வாய்ந்த ஜவுளி பூங்காக்களை அமைப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவில் 12 பூங்காக்கள் உட்பட 50 பூங்காக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 30 பூங்காக்கள் பணி நிறைவடைந்துள்ளது. இதுவரை மத்திய அரசு மானியமாக ரூ.1,532 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 7 இடங்களில் பிரதமரின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்கள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் விருதுநகர், தெலங்கானாவில் வாரங்கல், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகாவில் கல்புருகி, உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, மத்தியப் பிரதேசத்தில் தார், மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய இடங்களில் 2027-28 வரை 7 ஆண்டுகளுக்கு ரூ.4,445 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் மித்ரா பூங்கா மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாகும்.
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ், 7 பூங்காக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மக்களவையில் இன்று ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197517®=3&lang=1
***
AD/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2197621)
आगंतुक पटल : 24