சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக எய்ட்ஸ் நாள் 2025 நிகழ்வை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 7:25PM by PIB Chennai

மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா, இன்று (டிச. 1) புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் நாள் நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

எய்ட்ஸ் நோயை பொது சுகாதார அச்சுறுத்தலிலிருந்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் கட்டுப்பாடு திட்டத்தின்  கீழ் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.

2010 முதல் 2024 வரை, புதிய எச்.ஐ.வி தொற்றுகள் 48.7 சதவீதம் மற்றும் எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் 81.4 சதவீதம் குறைந்துள்ளன. தாய்-சேய் வழித் தொற்றுக் கடத்தல் 74.6 சதவீதம் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

2024-25-ல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18.60 லட்சமாக உயர்ந்துள்ளது. எச்.ஐ.வி தொற்றுகளில் உலக சராசரியை விட அதிகமாக 35 சதவீத குறைப்பையும், மரணங்களில் 69 சதவீத குறைப்பையும் இந்தியா பதிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

எச்.ஐ.வி பரிசோதனை, சிகிச்சை, விழிப்புணர்வு ஆகியவற்றில் உலகளாவிய இலக்குகளை அடைய இந்தியா உறுதியான பாதையில் செல்வதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் மருந்தியல் துறை உலகிற்கு மலிவான மருந்துகளை வழங்குவதன் மூலம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு உலக அளவில் பொறுப்பேற்றுள்ளதை அவர் பாராட்டினார்.

இந்நிகழ்வில், இளைஞர் விழிப்புணர்வு, தாய்-சேய் வழித் தொற்றுப் பரவலைத்  தடுத்தல், பாகுபாட்டை நீக்குதல் ஆகிய மூன்று கருப்பொருள்களை மையமாகக் கொண்ட தேசிய பல் ஊடக பிரச்சாரத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அத்துடன், ரகசிய இடர் மதிப்பீடு மற்றும் பரிசோதனை இணைப்புகளை வழங்கும் டிஜிட்டல் தளமான 'பிரேக்ஃப்ரீ'-ஐயும் அமைச்சர் திரு நட்டா அறிமுகப்படுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197198&reg=3&lang=2

***

AD/VK/RK


(रिलीज़ आईडी: 2197544) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi