ஊரக வளர்ச்சி அமைச்சகம்
சரஸ் ஆஜீவிகா உணவுத் திருவிழா 2025-ஐ புதுதில்லியில் டிசம்பர் 1 அன்று மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
30 NOV 2025 3:35PM by PIB Chennai
மத்திய ஊரக மேம்பாடு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், 2025 டிசம்பர் 1 அன்று புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நடைபெறும் சரஸ் ஆஜீவிகா உணவுத் திருவிழா 2025-ஐ தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்வார். ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர்கள் திரு சந்திரசேகர் பெம்மாசானி, திரு கமலேஷ் பாஸ்வான் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள்.
இந்த விழாவில், இந்திய கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளின் துடிப்பான தோற்றம் காட்சிப்படுத்தப்படும். நாடு முழுவதும் 25 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300 'லட்சாதிபதி சகோதரிகள்' (பெண் தொழில்முனைவோர்) மற்றும் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் 62 அரங்குகள் மூலம் சரஸ் உணவு விழாவில் பங்கேற்கின்றனர். 2025 டிசம்பர் 9 வரை நடைபெறும் இந்த விழா, புதுதில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறைக்கு அருகிலுள்ள பாரத சாரண சாரணியர் மார்கில் உள்ள சுந்தர் நர்சரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுத் திருவிழாவிற்கு காலை 11:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை பார்வையாளர்கள் வருகை தரலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196537®=1&lang=1
***
AD/RB/RK
(रिलीज़ आईडी: 2197457)
आगंतुक पटल : 5