PIB Headquarters
காசி தமிழ்ச் சங்கமம் பாரம்பரிய அறிவு, கலாச்சாரம் மற்றும் சமூகத்தை ஒன்றிணைக்கிறது
प्रविष्टि तिथि:
01 DEC 2025 11:16AM by PIB Chennai
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு பல நூற்றாண்டுகளாக இந்தியா மீதான எண்ணங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பாலமாக உள்ளது. தமிழ்நாடு மற்றும் காசி இடையே எண்ணற்ற யாத்ரீகர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்களது யோசனைகள், தத்துவங்கள், மொழிகள் மற்றும் வாழ்வியல் மரபுகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள உதவுகிறது.
காசி தமிழ்ச் சங்கமத்தின் 4-வது பதிப்பு நாளை (02.12.2025) தொடங்குகிறது.
பல தலைமுறைகளைக் கடந்து நாட்டின் கலாச்சாரத்துடன் இணைக்கும் வகையில் காசி தமிழ் சங்கமத்தின் நிகழ்ச்சிகள் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் நாட்டின் ஒவ்வொரு கலாச்சார வளமையையும் ஒருவருக்கொருவர் புரி்ந்து கொள்ளும் வகையிலும் இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி ஒரு முன்முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே, கலாச்சாரம், சுற்றுலா, ஜவுளி, எளியோர் நலன், விளையாட்டு என பத்து அமைச்சகங்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ், மற்றும் கலாச்சார அமைச்சகம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த காசி தமிழ் சங்கமத்தைச் சிறப்பாக ஏற்பாமடு செய்து வருகின்றன. இது மாணவர்கள், கலைஞர்கள், நிபுணர்கள், ஆன்மீகத்தலைவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரை ஒன்றிணைப்பதுடன் பரஸ்பரம் தங்களது யோசனைகளைப் பரிமாறிக் கொள்ளவும், கலாச்சார நடைமுறைகளை அறிந்து கொள்ளவும், மரபுசார் அறிவைப் பெறவும் உதவுகிறது.
தமிழகத்திலிருந்து காசிக்கு கலாச்சாரப் பயணமாக வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை காசியில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், அயோத்தியா, பிரயாக்ராஜ் உள்ளிட்ட ஆன்மீகத் தலங்கள் மற்றும் பல்வேறு கோயில்களுக்குச் சென்று பார்வையிடுகின்றனர். மேலும் காசியில் நடைபெறும் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டு, கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகளிலும் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196772®=3&lang=1
****
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2197312)
आगंतुक पटल : 7