PIB Headquarters
azadi ka amrit mahotsav

புதிய தொழிலாளர் சட்டங்கள் பெட்ரோலியத் துறைக்கு பெரும் பயனளிக்கிறது

प्रविष्टि तिथि: 01 DEC 2025 9:44AM by PIB Chennai

நாட்டிலில் உள்ள அனைத்து பெட்ரோலியம் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வழங்கும் வகையில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமைந்துள்ளன. இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ கண்காணிப்பு பயிற்சி மற்றும் சான்றுகள் அடிப்படையிலான போட்டித்திறன் மேம்பாடு, மேம்பட்ட பாதுகாப்பு நிலைகள் மற்றும் அவசரகால தயார் நிலைக்கான நடவடிக்கைகள் இந்த சட்டங்களின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சமூக பாதகாப்புச் சட்டத்தின் கீழ், அரசு தொழிலாளர்  ஈட்டுறுதிக்கழக காப்பீடு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரவுபடுத்தப்பட்டுள்ளது. பெட்ரோலியத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் டிஜிட்டல் அடிப்படையிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு தடையில்லா இணக்க நடைமுறைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பணிச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம், தொழில்துறை உறவுகள் சட்டம், ஊதியச் சட்டம் ஆகிய நான்கு தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் விரிவான மற்றும் பாதுகாப்புக்கான சீரான கட்டமைப்புகள், மேம்பட்ட பணிச்சூழல் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொழிலாளர்களுக்கு உதவி செய்வதாக அமைந்துள்ளது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையான  பெட்ரோலியத்துறையில், ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அபாயம் கொண்ட தொழில்துறையாக உள்ள பெட்ரோலியத்துறையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்கள், அத்துறையின் அனைத்து நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கும் பேருதவியாக அமைந்திடும். நாட்டில் பெட்ரோலியத்துறை என்பது அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாகவும், மிகவும் முக்கியமான மற்றும் பல்வேறு அபாயங்களைக் கொண்டதாகவும் உள்ளதால், இத்தகைய தொழிலாளர் நலச் சட்டங்கள் அத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறந்தப் பாதுகாப்பை உறுதி செய்யும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196726&reg=3&lang=1

****

AD/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2197310) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati