குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் காலணி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது – குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

प्रविष्टि तिथि: 01 DEC 2025 1:55PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (டிசம்பர் 1, 2025) நடைபெற்ற காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியா தற்சார்பில் வளர்ச்சியடைந்து வரும் நாடாகவும், உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தும் திறன் கொண்ட நாடாகவும் திகழ்கிறது என்று கூறினார். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், காலணித் துறைக்கு சாம்பியன் துறை என்ற அந்தஸ்து, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு வர்த்தக மற்றும் தொழில் மேம்பாட்டுத்துறை மூலம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மகிழச்சியுடன் குறிப்பிட்டார்.

காலணித் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையையும், ஊக்கத்தொகைகளையும் அரசு வழங்குவதாக அவர் தெரிவித்தார். காலணி தயாரிப்பு மற்றும் நுகர்வில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார்.

2024 - 25-ம் நிதியாண்டில் இந்தியாவின் காலணி ஏற்றுமதி 2500 மில்லியின் டாலருக்கும் அதிகமான அளவில் இருந்ததாகவும், காலணி இறக்குமதி சுமார் 680 மில்லியன் டாலராகவும் இருந்தது என்று அவர் தெரிவித்தார். அதனால் இந்தியாவின் காலணி ஏற்றுமதி, இறக்குமதியுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்காகும் என்று அவர் கூறினார். உலகில் காலணி ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். எனினும் நமது ஏற்றுமதிகளை மேலும் அதிகரிக்க காலணி வர்த்தகம் விரிவாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்த விரிவாக்கம் மாணவர்கள், தொழில் முனைவோர்களாக திகழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும், இத்தொழில்துறை வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம், நார்த்தாம்டன் பல்கலைக்கழகமிடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார். இந்நடவடிக்கை, இந்தியா – பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான மற்றொரு பரிணாமம் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

***

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196840&reg=3&lang=1

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2197121) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Malayalam