PIB Headquarters
உலக எய்ட்ஸ் தினம் - உலகளாவிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடுகள்
प्रविष्टि तिथि:
30 NOV 2025 11:31AM by PIB Chennai
உலக எய்ட்ஸ் தினம் என்பது ஹெச்ஐவி/எய்ட்ஸ் தொற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஹெச்ஐவி தொடர்பான நோய்களால் இறந்தவர்களை நினைவுகூரவும், ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி கடைபிடிக்கப்படும் ஒரு உலகளாவிய தினமாகும். இது முதன்முதலில் 1988-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்பட்டது. இந்த தினம் பல்வேறு நாடுகளின் அரசுகள், சமூகங்கள், தனிநபர்கள் போன்றோர் இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவதற்கான ஒரு நாளாக மாறியுள்ளது. இந்த தினத்தின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் 'இடையூறுகளை சமாளித்தல், எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மாற்றி அமைத்தல்' என்பதாகும்.
இந்தியாவில் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, நாடு தழுவிய விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி உலக எய்ட்ஸ் தினத்தைக் கடைபிடிக்கிறது. இந்தியாவின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் உலக அளவில் ஒரு சிறந்த வெற்றிக் கதையாகப் பாராட்டப்படுகிறது. ஹெச்ஐவி நோயாளிகளைக் கண்டறிதல், பாதுகாப்பான ரத்தமாற்றத்தை உறுதி செய்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது. 1992-ம் ஆண்டில் இந்த நடவடிக்கை வேகம் பெற்றது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஐந்தாம் கட்டம், 2030-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டுள்ளது. ₹15,471.94 கோடி செலவில் மத்திய திட்டமாக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் ஐந்தாம் கட்டம், கடந்த கால சாதனைகளை தொடர்வதையும், சவால்களை எதிர்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அக்டோபர் 2025 நிலவரப்படி நாடு முழுவதும் இதில் 1587 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவை நோய்த்தடுப்பு, பரிசோதனை, சிகிச்சை, பராமரிப்பு சேவைகளை உறுதி செய்துள்ளன.
ஹெச்ஐவி/எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் பயணம், மீள்தன்மை, புதுமை அர்ப்பணிப்பு ஆகியவற்றை அழுத்தமாக உள்ளடக்கியுள்ளது. இந்தியாவில் எய்ட்ஸ் பரவல், உலகளாவிய சராசரியை விட மிகவும் குறைவாகவே உள்ளது. பரந்த அளவிலான சோதனை, மேம்பட்ட சிகிச்சை, அதிக ஆபத்துள்ள குழுக்கள் மீது அதிக கவனம் செலுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196475®=3&lang=1
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/nov/doc20251130711801.pdf
https://naco.gov.in/nacp
https://naco.gov.in/sites/default/files/NACO%20Stigma%20Handbook.pdf
https://www.mohfw.gov.in/?q=en/pressrelease-270
***
(Release ID: 2196475)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2196548)
आगंतुक पटल : 12