தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டித்வா புயலையொட்டி தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 30 NOV 2025 10:24AM by PIB Chennai

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள டித்வா புயல், கடலோர ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தொலைத்தொடர்பு கட்டமைப்பின் மீட்சித் தன்மையை உறுதி செய்வதற்காக தொலைத்தொடர்புத் துறை விரிவான தயார்நிலை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

புயல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொலைத்தொடர்பு இணைப்பு கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், சேவை வழங்குநர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், மாவட்ட நிர்வாகங்கள், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை மூலம் உடனடி நடவடிக்கைகளை எளிதாக்கவும், தொலைத்தொடர்புத் துறை 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் (TSPs) தடையற்ற செயல்பாடுகள், போதுமான எரிபொருள் இருப்பு, அவசரகால தயார்நிலை ஆகியவற்றை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி, அவசர காலங்களில் தகவல் தொடர்பு சேவைகளைப் பராமரிக்க, அனைத்து நெட்வொர்க்குகளிலும் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR), செல் ஒலிபரப்பு (CB) சோதனை ஆகியவற்றை தொலைத் தொடர்புத் துறை உறுதி செய்துள்ளது. புயலின் போதும் அதற்குப் பின்னரும் தடையற்ற தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

***

(Release ID: 2196470)

AD/PLM/RJ


(रिलीज़ आईडी: 2196547) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali