பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொழும்பில் நடைபெற்ற இலங்கை கடற்படையின் சர்வதேச கடற்படை மதிப்பாய்வு 2025 - ல் ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன

प्रविष्टि तिथि: 28 NOV 2025 1:25PM by PIB Chennai

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் உதய்கிரியுடன் இணைந்து, இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டு நவம்பர் 27 முதல் 29, 2025 வரை கொழும்பில் நடத்தப்படும் சர்வதேச கடற்படை மதிப்பாய்வு (ஐஎஃப்ஆர்) 2025 - ல் இந்திய கடற்படை சார்பில் பங்கேற்றுள்ளது. இந்த நிகழ்வு இலங்கை கடற்படையின் 75 - வது ஆண்டு நிறைவின் ஒரு அங்கமாக நடத்தப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படைக் கப்பல்கள், பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இது இரண்டு போர் கப்பல்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்தைக் குறிப்பதுடன், பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட நாட்டின் பெருமைக்குரிய ஐஎன்எஸ் விக்ராந் விமானந்தாங்கி போர்க்கப்பல், சர்வதேச கடற்படை மதிப்பாய்வில் முதன் முறையாகப் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டை இது எடுத்துக் காட்டுகிறது. மேலும், ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மை மூலம் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இந்தியாவின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

அண்மையில் இந்தியக் கடற்படையுடன் இணைக்கப்பட்டுள்ள  ஐஎன்எஸ் உதய்கிரி போர்க்கப்பலின் பங்கேற்பு, இந்தியாவின் வளர்ந்து வரும் உள்நாட்டு கப்பல் கட்டுமானத் திறன்களையும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் சமநிலையான, விரிவான கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195767&reg=3&lang=2   

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2196528) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu