'கோந்தல்' என்ற மராத்தி திரைப்படத்திற்காக சந்தோஷ் தவக்கருக்கு சிறந்த இயக்குனருக்கான "வெள்ளி மயில்" விருது
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், மராத்தி திரைப்படமான 'கோந்தல்' படத்திற்காக சந்தோஷ் தவக்கருக்கு சிறந்த இயக்குநருக்கான "வெள்ளி மயில்" விருது வழங்கப்பட்டது.
கதையை அனுபவமாகவும், கலாச்சார நினைவை எதார்த்தமாகவும் மாற்றியமைத்துள்ள இயக்குநரின் சிறப்பை கௌரவிக்கும் வகையில், இந்த விருதில் "வெள்ளி மயில்" கோப்பை, தகுதிச் சான்றிதழ் மற்றும் 15,00,000 ரூபாய்க்கான ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும். இந்த விருதை கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் இணைந்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழுத் தலைவர் திரு ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் விழா இயக்குநர் திரு சேகர் கபூர் ஆகியோர் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
"கலாச்சார பாரம்பரியத்தின் வளமான கட்டமைப்பில் அமைக்கப்பட்ட கதைக்களத்தை இயக்குனர் ஒரு சிறந்த திரைப்படமாக உருவாகியுள்ளதாகவும், பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பில் வைத்திருக்கும் ஒரு வசீகரிக்கும் கதையம்சம் கொண்டதாகவும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஆச்சரியத்தை அளிக்கும் வகையிலும் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று நடுவர் குழு தெரிவித்துள்ளது. "கோந்தல்" என்பது ஒரு உண்மையான உலகில் அமைக்கப்பட்ட ஷேக்ஸ்பியரின் கட்டுக்கதை போன்றது" என்று அக்குழு கூறியுள்ளது.
இந்த அங்கீகாரம் கோந்தல் திரைப்படத்தை 56 -வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் வரையறுக்கப்பட்ட கலை அறிக்கைகளில் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளது. இத்திரைப்படம், பாரம்பரியம் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகிய இரண்டையும் கொண்ட குரலாகவும், நினைவுகளிலிருந்து பிறந்த திரைப்படமாகவும், செயல்திறனால் கூர்மைப்படுத்தப்பட்டு, கற்பனை வளத்தால் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்ட ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இயக்குனர் சந்தோஷ் தவக்கரின் கலைத்திறனைக் குறிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196166
***
AD/SV/RJ
रिलीज़ आईडी:
2196428
| Visitor Counter:
5