PIB Headquarters
தொழிலாளர் சட்டங்கள் துறைமுகத் தொழிலாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கின்றன
प्रविष्टि तिथि:
28 NOV 2025 1:17PM by PIB Chennai
துறைமுகப் பணிகளை நிறுவனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்தல், மற்றும் துறைமுக நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவது போன்றவை தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க உதவுகிறது. புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கடல்சார் சட்டம் துறைமுகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனுக்கான மாற்றத்தக்க நன்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
துறைமுகத் தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் கிடைக்க இது வகை செய்கிறது.
பொருளாதார மேம்பாட்டிற்கு தொழிலாளர் நலன் முக்கிய உந்து சக்தியாக உள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளை நிர்வகிக்கும் கட்டமைப்புக்களை எளிமைப்படுத்தவும், வலுப்படுத்தவும், மத்திய அரசு 29 தொழிலாளர் நலச் சட்டங்களை, ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை உறவுகள் தொடர்பான சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் சட்டம் 2020 என நான்கு விரிவான தொழிலாளர் சட்டங்களாக ஒருங்கிணைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்த நடவடிக்கைகள், தொழிலாளர்கள் பாதுகாப்பு, கண்ணியம், சுகாதாரம் மற்றும் நலனுக்கான நடவடிக்கைகளை எளிதாக அணுகுவதை உறுதி செய்கிறது. இது நியாயமான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தொழிலாளர் நலன் சார்ந்த சூழல் அமைப்பிற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது.
இந்திய துறைமுகச் சட்டம் மற்றும் வர்த்தகக் கப்பல் சட்டம் போன்ற கடல்சார் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளுடன், இந்தியாவின் நான்கு தொழிலாளர் சட்டங்களில் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள், துறைமுகத் தொழிலாளர்களுக்கு மாற்றத்தக்க நன்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் முந்தைய சட்டங்களின் கீழ் இருந்த பாதுகாப்பு, நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் நீண்டகால இடைவெளிகளை நிவர்த்தி செய்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195764
(Release ID:2195764)
****
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2196159)
आगंतुक पटल : 12