ஸ்பையிங் ஸ்டார்ஸ்: உணர்வு, தொழில்நுட்பம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த திரைப்பயணம்
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 'ஸ்பையிங் ஸ்டார்ஸ்' திரைப்படத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் விமுக்தி ஜெயசுந்தர மற்றும் தயாரிப்பாளர் நிலா மாதப் பாண்டா கூட்டணியில் உருவான இப்படம், டிஜிட்டல் உலகில் மனித உணர்வுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
இயந்திரமயமான சூழலில் மனிதப் பிணைப்பைத் தக்கவைப்பது குறித்து இப்படம் வெளிபடுத்துவதாக இப்படத்தின் இயக்குநர் தெரிவித்தார். தொழில்நுட்பத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் சவாலான கதையைத் திரையில் வெற்றிகரமாகக் கொண்டு வந்துள்ளதாகத் தயாரிப்பாளர் குறிப்பிட்டார்.
அறிவியல் விஞ்ஞானி ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திரா திவாரி, தனது நடிப்பு அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். தந்தையின் இறுதிச் சடங்கிற்காக அனுமன் தீவு செல்லும் ஆனந்தி, பெருந்தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் ஒரு மர்ம நட்சத்திரத்திடமிருந்து தப்பித்து, ஒரு திருநங்கை மற்றும் அவரது தாயிடம் அடைக்கலம் புகுவதுதான் இப்படத்தின் கதைக்களம். சுற்றுச்சூழல் மற்றும் மனிதத் தொடர்புகளை இப்படம் அழகாக இணைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193030
***
SS/SE
रिलीज़ आईडी:
2195474
| Visitor Counter:
22