இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: பன்முகத்தன்மையை பறைசாற்றும் பிராந்திய மொழித் திரைப்படங்கள்
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட கன்னடம், ஒடியா மற்றும் வங்காள மொழித் திரைப்படங்கள் இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தின.
‘சு ஃப்ரம் சோ’ – (கன்னடம்): இயக்குநர் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படம், மூடநம்பிக்கைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த சமூகப் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் அணுகுகிறது. தீவிரமான கருத்துக்களை மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்க நகைச்சுவை உதவுவதாக இயக்குநர் பிரகாஷ் தெரிவித்தார்.
‘மாலிபுட் மெலடீஸ்’ – (ஒடியா): ஒடிசாவின் கோராபுட் கிராம மக்களின் கதைகளைத் தொகுத்து வழங்கும் இப்படம், அங்கிருக்கும் உள்ளூர் மக்களையும் கலாச்சாரத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. இயக்குநர் விஷால் பட்நாயக் மற்றும் தயாரிப்பாளர் கௌஷிக் தாஸ் ஆகியோர், பெரும்பாலும் பயிற்சி பெறாத கிராம மக்களைக் கொண்டே இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
‘பியே ஃபியே நியே’ – (வங்காளம்): நகர்ப்புற நடுத்தர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கை மற்றும் திருமணச் சிக்கல்களை இப்படம் வழங்குகிறது. இயக்குநர் நீல் தத்தா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய இப்படத்தை, மூத்த இயக்குநர் அஞ்சன் தத்தா தயாரித்துள்ளார். இளம் படைப்பாளிகளுக்கு மூத்த கலைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193029
***
SS/SE/KR
रिलीज़ आईडी:
2195280
| Visitor Counter:
19