தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜூ சந்திரா, மராத்தி திரைப்பட இயக்குநர் மிலிந்த் லீலே தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்
இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா பிராந்திய சினிமாவின் பன்முகத்தன்மையையும் பாரம்பரியத்தையும் கொண்டாடுகிறது. அந்த வகையில், தமிழ் திரைப்படமான பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மராத்திய திரைப்படமான துர்ஷியா அத்ருஷியா திரைப்படக் குழுவினர் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரைப்பட இயக்குநர் திரு ராஜூ சந்திரா, உள்ளூர் கலாச்சார பாரம்பரியத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு அந்த சமூகம் மற்றும் ஊக்கம் விளைவிக்காமல் மற்ற கலாச்சாரக் குழுக்களும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளல், குழுப்பணி ஆகியவை இந்த பிராந்தியத் திரைப்படத்திற்கான வெற்றி என்று அவர் குறிப்பிட்டார். இந்த உரையாடலின் போது முன்னணி நடிகர் அப்புக்குட்டியும் உடனிருந்தார்.
மராத்திய திரைப்படமான துர்ஷியா அத்ருஷியா இயக்குநர் மிலிந்த் லீலே பேசிய போது, வெறும் 8 முதல் 10 நடிகர்களுடன் தனிப்பட்ட தங்குமிடத்தில் தயாரிக்கப்பட்ட சஸ்பென்ஸ் நிறைந்த இத்திரைப்படம் அர்ப்பணிப்புமிக்க திரைப்படக் குழுவால் வெற்றி பெற்றது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193454
**
AD/IR/KPG/SE
Release ID:
2194900
| Visitor Counter:
6