பாண்ட் முதல் பேட்மேன் வரை, சிறப்பு சத்தத்துடன் கூடிய காட்சிகளின் ரகசியங்களை சர்வதேச திரைப்படவிழாவில் பகிர்ந்து கொண்ட கிறிஸ் கார்பௌல்ட்
சிறப்பு சத்தத்துடன் கூடிய காட்சி அமைப்புகளுக்காக (Special Effects - SFX) அகாடமி விருது பெற்ற பிரபல திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர் கிறிஸ்டோபர் சார்லஸ் கார்பௌல்ட், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'பாண்ட் முதல் பேட்மேன் வரை: SFX, ஸ்டண்ட்ஸ் & ஸ்பெக்டகிள்' என்ற அமர்வில் தனது நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இவர் 15 பாண்ட் திரைப்படங்கள் மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி டார்க் நைட்’, ‘இன்செப்ஷன்’ போன்ற படங்களுக்குப் சிறப்பு சத்தத்தை ஒலியை வடிவமைத்துள்ளார்.
நடைமுறையில் என்ன செய்ய முடியுமோ அவ்வாறு செய்வதை நான் ஒரு வழிகாட்டும் தத்துவமாக பின்பற்றி வருகிறேன் என்று கூறிய அவர், சிறப்பு காட்சிகளும் டிஜிட்டல் மூலம் ஏற்படுத்தப்படும் சிறப்பு காட்சியமைப்புகளும் தடையின்றி கலப்பதன் மூலம் சிறந்த சினிமா தருணங்கள் பிறக்கின்றன என்றார்.
கிறிஸ்டோபர் நோலனுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிப் பேசிய அவர், நோலன் எப்போதும் உண்மையான கார் மோதல்கள், உண்மையான கட்டமைப்புகள் போன்ற நடைமுறையான செயல்பாடுகளைத்தான் அதிகம் கோருவார் என்றார்.
‘இன்செப்ஷன்’-ல் சுழலும் தாழ்வாரத்தை உருவாக்கியது, ‘தி டார்க் நைட்’-இல் ஒரு நிஜமான டிரக்கை கவிழ்த்தது போன்ற சவாலான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவர், திரையில் தெரியும் ஒவ்வொரு கண்கவர் தருணத்திற்கும் பின்னால், குறைந்தது 25 முறையாவது முழுமையாக சோதனை செய்து பார்ப்போம் என்று கூறினார். நடிகர்களின் பாதுகாப்பும் வசதியுமே தனது முதன்மையான அக்கறை என்றார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றிப் பேசுகையில், அது தனது வேலையை ஒருபோதும் நீக்க முடியாது என்றும், அது ஒரு "கருவியாக இருக்க வேண்டும், முழு நிகழ்வாக அல்ல" என்றும் கூறினார்.
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ். ராஜமௌலியைப் பாராட்டிய கார்பௌல்ட், தற்போது எஸ்எப்எக்ஸ் மேற்பார்வையிலிருந்து விலகி இயக்குநராகப் பணியாற்ற விரும்புவதாகவும், இந்தியாவில் கதை சொல்ல ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194326
***
AD/VK/SE
Release ID:
2194886
| Visitor Counter:
3