56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'வாழ்க்கையின் முழு வட்டத்தையும்' 'பிந்துசாகர்' திரைப்படம் பிரதிபலித்தது
"பிந்துசாகர் என்பது வெறும் பெயர் அல்ல; அது மில்லியன் கணக்கான ஒடியா மக்களால் போற்றப்படும் ஒரு உணர்வு. இந்தப் படம் எடுப்பதற்கு அந்த உணர்வுதான் காரணம். ஒருபுறம் இறுதிச் சடங்குகளும், மறுபுறம் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பெயரிடும் நிகழ்வுகளும் நடைபெறும் புனித ஏரியான பிந்துசாகர், வாழ்க்கையின் தூய்மையான வட்டத்தை பிரதிபலிக்கிறது. ஒடியாவில் வசிக்கும் ஒவ்வொருவரின் இதயத்தையும் உள்ளுணர்வால் இணைக்கும் ஒரு தனித்துவமான ஆற்றலை, காலத்தால் அழியாத அதிர்வை இந்தத் திரைப்படம் கொண்டுள்ளது", என்று பிந்துசாகர் திரைப்படத்தின் இயக்குநர் அபிஷேக் ஸ்வைன் கூறியுள்ளார். கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஊடகங்களைச் சந்தித்தபோது அபிஷேக் ஸ்வைன் இதனைத் தெரிவித்தார்.
ஒடியா பார்வையாளர்களுக்கு உண்மையான ஒடியா திரைப்படத்தை உருவாக்குவது என்ற தனது தயாரிப்பாளரின் தொலைநோக்குப் பார்வையை அவர் பிரதிபலித்தார். தயாரிப்பாளர் ஷிலாதித்ய போரா, 'பிந்துசாகர்' என்ற கருத்துறு மற்றும் தலைப்புடன் உடனடியாக தன்னை இணைத்துக் கொண்டதாக அவர் கூறினார். ஒடிசாவின் கலை, கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இந்தக் கதையை ஒரு ஈர்க்கக்கூடிய, வணிக ரீதியான மற்றும் இதயப்பூர்வமான முறையில் திரைக்குக் கொண்டு வந்ததில் அவர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194370
***
AD/BR/KR
Release ID:
2194858
| Visitor Counter:
3