குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்
Posted On:
25 NOV 2025 2:03PM by PIB Chennai
இந்திய வருவாய் பணியின் (சுங்கத்துறை மற்றும் மறைமுகவரிகள்) பயிற்சி அதிகாரிகள் (76-வது தொகுப்பு) இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர். அவர்களிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், நாட்டைக் கட்டமைப்பதில் வருவாய் முக்கியப் பங்கு வகிப்பதாக கூறினார். நாட்டைக் கட்டமைக்கும் நடைமுறைகளில் வருவாய் பணி அதிகாரிகள் செயல்படுவதாகக் கூறினார்.
வரி வசூல், வரி செலுத்துவோருக்கு எளிதாக இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். வருவாய் பணி அதிகாரிகள், நிர்வாகிகள், புலனாய்வு அதிகாரிகள், உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். கடத்தல், நிதி மோசடி, சட்டவிரோத வர்த்தகம் ஆகிய நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை ஒழித்து, இந்தியப் பொருளாதாரத்தின் முன்னோடிகளாக அவர்கள் திகழ்வதாகவும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194028
***
SS/IR/KPG/SH
(Release ID: 2194318)
Visitor Counter : 10