நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
தேசிய அரசியல் சாசன தினக் கொண்டாட்டங்கள் நாடாளுமன்றத்தில் நவம்பர் 26 அன்று தொடங்குகிறது
प्रविष्टि तिथि:
25 NOV 2025 1:45PM by PIB Chennai
அரசியல் சாசன தினம் 2025-ஐ யொட்டிய தேசிய நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 2025 நவம்பர் 26 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. குடியரசுத்தலைவர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்கள் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், மக்களவைத் தலைவர், குடியரசு துணைத்தலைவர் உரையாற்ற உள்ளனர். அதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார். மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அசாமி ஆகிய மொழிகளில் அரசியல் சாசனம் வெளியிடப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் அரசியல் சாசன முகவுரையை வாசிக்க உள்ளார். குடிமக்கள், mygov.in மற்றும் constitution75.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முகவுரையை வாசிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194014
(Release ID: 2194014)
***
SS/IR/SE/SH
(रिलीज़ आईडी: 2194309)
आगंतुक पटल : 7