PIB Headquarters
நமது அரசியல் சாசனம் –நமது பெருமை பிரச்சாரம்
Posted On:
25 NOV 2025 12:16PM by PIB Chennai
1949-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்தியா அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த நாளை இந்தியா குடியரசு தினமாகக் கொண்டாடுகிறது. எழுபத்தைந்து ஆண்டுகளாக, இது நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தை வழிநடத்துதல் ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்தி வருகிறது.
இந்தியா ஒரு குடியரசாக மாறிய 75-வது ஆண்டையும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் நினைவுகூரும் வகையில், நீதித்துறை, பொது மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டங்களை எளிமைப்படுத்துவதற்காக, நமது அரசியல் சாசனம் , நமது மரியாதை என்ற தலைப்பில், ஆண்டு முழுவதும் நாடு தழுவிய பிரச்சாரத்தை செயல்படுத்துகிறது.
2024 ஜனவரி 24 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், விழாவைத் தாண்டி நாடு தழுவிய குடிமை அணிதிரட்டலாக மாறியது. அரசியலமைப்பு லட்சியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வருட கால பிரச்சாரத்தைத் தொடர்ந்து, நமது அரசியல் சாசனம் - நமது பெருமை என மாற்றப்பட்டது. இந்தப் பரிணாம வளர்ச்சியடைந்த பிரச்சாரம் 2024-2025 முழுவதும் உருவாக்கப்பட்ட உத்வேகத்தை தொடர்ந்து உருவாக்கி, அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் சட்ட எழுத்தறிவுடன் பொதுமக்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்துகிறது.
இது மக்களிடையே பெருமையையும் ஆழமான அரசியலமைப்பு உணர்வையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்னேற்றம் சட்ட எழுத்தறிவை ஏற்படுத்துவதற்கும், மக்கள் தங்கள் உரிமைகளை அறிந்து கொள்வதற்கும், அவற்றில் பெருமை கொள்ளவும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு நிலையான அரசு உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
இந்தியா முழுவதும் 13,700-க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்றனர். சட்ட எழுத்தறிவை ஏற்படுத்துவதற்கும் மக்கள் இடையே பெருமை உணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த முன்முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முழுவிவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193980
***
SS/PKV/SH
(Release ID: 2194298)
Visitor Counter : 7