PIB Headquarters
லட்சியத்தைச் சந்திக்கும் பாரம்பரியம்
प्रविष्टि तिथि:
25 NOV 2025 11:21AM by PIB Chennai
புது தில்லியில் நடைபெறும் 44-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐஐடிஎப்), இளம் கைவினைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்துள்ளது. ஐஐடிஎப் 2025, பிஜ்னோர் முதல் மதுபானி வரை, அல்வார் முதல் கட்ச் வரை, துனிசியாவின் மத்திய தரைக்கடல் முழுவதும் இருந்து கூட, இந்தியா மற்றும் உலகின் பொருளாதார, கலாச்சார அமைப்பை மறுவடிவமைக்கும் லட்சியம் கொண்ட ஒரு புதிய தலைமுறையைக் வெளிக்காட்டுகிறது.
பாரத் மண்டபத்தின் பரந்த தாழ்வாரங்களில், இளம் பங்கேற்பாளர்கள் வெறும் பொருட்களை மட்டும் விற்பனை செய்யவில்லை. அவர்கள் குடும்ப மரபுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். பாரம்பரிய கைவினைகளை மீண்டும் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வருகின்றனர். புதிய தொழில்நுட்பங்களை பரிசோதித்து வருகின்றனர்.
எம்எஸ்எம்இ வளர்ச்சி, திறன் மேம்பாடு, கிராமப்புற வாழ்வாதாரங்கள் மற்றும் உலகளாவிய சந்தை இணைப்புகளை ஊக்குவிக்கும் கொள்கைகளின் உயிருள்ள வெளிப்பாட்டை ஐஐடிஎப் அரங்குகளில் காணலாம். இந்த முயற்சிகளுக்குத் துணையாக மத்திய அரசின் இளைய பாரதம் உள்ளது. இது இளைஞர்களுக்கு தலைமைத்துவத்தை உருவாக்கவும், புதுமைகளைத் தொடரவும், அவர்களின் ஆற்றலை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்த்தமுள்ள செயலாக மாற்றவும் ஒரு அர்ப்பணிப்பு தளத்தை வழங்குகிறது.
ஐஐடிஎஃப் 2025-ல், விருப்பங்கள் வாய்ப்பைச் சந்திக்கின்றன - இளம் இந்தியர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒரு தேசிய மற்றும் சர்வதேச அரங்கை இது வழங்குகிறது.
ஐஐடிஎஃப் 2025, அதன் அரங்குகள் மூலம் மட்டுமல்லாமல், கண்காட்சிக்கு அதன் ஆற்றலையும் நோக்கத்தையும் வழங்கும் இளம் பங்கேற்பாளர்கள் மூலம், ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாக இருக்கிறது. இந்த இளைஞர்கள் - தொழில்முனைவோர், கைவினைஞர்கள், இந்தியாவின் பன்முகத்தன்மையை அதன் மிகவும் துடிப்பான வடிவத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்களின் பணி உள்ளூர் அறிவை நவீன லட்சியத்துடன் இணைகிறது. ஒவ்வொரு பிராந்தியத்தின் திறமையும் அங்கீகரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, செழிக்க இடம் கொடுக்கப்படும்போது ஒற்றுமை எவ்வாறு வலுவடைகிறது என்பதை நிரூபிக்கிறது.
மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திஅக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193940
***
SS/PKV/SE/SH
(रिलीज़ आईडी: 2194279)
आगंतुक पटल : 5