அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நிமோனியா, மூளைக்காய்ச்சல் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க நவி மும்பையில் உள்ள நிறுவனத்திற்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆதரவு

Posted On: 21 NOV 2025 1:52PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 16-வேலண்ட் நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியை (பிசிவி-16) உற்பத்தி செய்வதற்கான வணிக அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு, நவி மும்பையில் உள்ள டெக்இன்வென்சன் லைப்கேர் நிறுவனத்திற்கு நிதி உதவியை அனுமதித்துள்ளது. நிமோனியா, மூளைக்காய்ச்சல், காது தொற்று போன்றவற்றிலிருந்து தடுக்க இந்த தடுப்பூசி பயன்படும். அடுத்த தலைமுறை  தடுப்பூசிகளில் இந்தியாவின் திறனை வலுப்படுத்துவதையும், உள்நாட்டு கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி மூலம் இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளை நீண்டகாலமாக சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிசிவி-16 தொழில்நுட்பம், இந்தியா மற்றும் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில்  நிமோகாக்கல் நோய், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அதிக இறப்பு அபாயங்களுடன் பரவுகிறது. இதற்கு எதிரான தடுப்பூசி பரந்த பாதுகாப்பை வழங்குகிறது.

இந்தத் திட்டம், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு செலவு குறைந்த நோய்த்தடுப்பு மருந்தை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட செரோடைப் முன்னுரிமையின் அறிவியல் அடிப்படையிலான மறு மதிப்பீட்டை பிரதிபலிக்கிறது.

இந்தத் திட்டம் இப்போது முழு அளவிலான தடுப்பூசி உற்பத்திக்கு வழி வகுக்கும். இந்த முயற்சி, முக்கியமான தடுப்பூசிகளில் இந்தியாவின் தன்னம்பிக்கையை கணிசமாக அதிகரிக்கும், உள்நாட்டு உயிரி உற்பத்தி திறனை மேம்படுத்தும் மற்றும் எதிர்கால பன்முகத்தன்மை கொண்ட தளங்களுக்கான பாதைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192438

 

 

***

AD/PKV/SH


(Release ID: 2192719) Visitor Counter : 4