சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார இயக்கம் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் எடுத்துக்காட்டு - மத்திய அமைச்சர் திரு ஜே.பி. நட்டா
Posted On:
20 NOV 2025 1:32PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சரும், தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக குழுவின் தலைவருமான திரு ஜே.பி. பிரகாஷ் நட்டா, இன்று (20-11-2025) தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய சுகாதார இயக்கத்தின் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் தொடக்க உரை நிகழ்த்தினார். நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரும், சுகாதார இயக்கத்திற்கான அறிவியல் வழிகாட்டுதல் குழுவின் தலைவருமான டாக்டர் அஜய் கே. சூட் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த இரண்டு நாள் நிகழ்வின் கருப்பொருள் "மருத்துவ அறிவாற்றலை நடைமுறையில் செயல்படுத்துதல் - ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம், ஒரே எதிர்காலம்" என்பதாகும்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு ஜே.பி. நட்டா, 'ஒரே பூமி, ஒரே சுகாதாரம், ஒரே எதிர்காலம்' என்பது வெறும் கருப்பொருள் அல்ல என்றும் அது சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய தொற்று பாதிப்புகளுக்கு எதிரான தயார்நிலையை மேம்படுத்துவதற்குமான அடித்தளமாகும் என்று கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் சுகாதார ஆராய்ச்சியிலும் கண்டுபிடிப்புகளிலும் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மருந்துகள் துறையில் உலக அளவில் இந்தியா ஒரு முக்கிய பங்களிப்பாளராக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார். தடுப்பூசி உருவாக்கத்தில் நாட்டின் சாதனைகளை அவர் எடுத்துரைத்தார்.
நோய் கண்டறிதல் துறையில், இந்தியா சிறப்பு மையமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் திறமையான ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்து வரும் புத்தொழில் நிறுவனங்கள், வலுவான தொழில்நுட்ப திறன்கள் ஆகியவை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேசிய சுகாதார இயக்கம் மனித சுகாதாரம், விலங்கு சுகாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம், மருந்துகள், புவி அறிவியல், விண்வெளி அறிவியல் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய 16 வெவ்வேறு மத்திய, மாநில அமைச்சகங்கள், துறைகளை ஒருங்கிணைக்கிறது என அவர் குறிப்பிட்டார். இந்த இயக்கம் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்துக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் தனித்துவமான எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். முதல் முறையாக, மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் என அனைத்தின் ஆரோக்கியத்திற்காகவும் கூட்டாகச் செயல்பட, தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக திரு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆராய்ச்சித் துறையின் இணைச் செயலாளர் திருமதி அனு நாகர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலான ஐசிஎம்ஆரின் தொற்று நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் நிவேதிதா குப்தா, மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192022
***
VL/PLM/KPG/SH
(Release ID: 2192251)
Visitor Counter : 6