PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்திய பாரம்பரியத்தைப் பறைசாற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சி

Posted On: 20 NOV 2025 11:24AM by PIB Chennai

பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025 நவம்பர் 14 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது , இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார கண்காட்சிகளில் ஒன்றாகும். 44 ஆண்டுகாலமாக நடத்தப்படும் இந்தக் கண்காட்சி, ஒரே பாரதம் – உன்னத பாரதம் என்ற கருப்பொருளை பிரதிபலிக்கிறது. இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்கள், அமைச்சகங்கள், உலகளாவிய பங்கேற்பாளர்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்களை என அனைத்துத் தரப்பினரும் ஒரே கூரையின் கீழ் இணைந்து தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இது வேற்றுமையில் ஒற்றுமையையும் நாட்டின் பொருளாதார பலத்தையும் பிரதிபலிக்கிறது. பல தயாரிப்புகளைக் கொண்ட அரங்குகள், மாநில அரங்குகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. ஜார்க்கண்டின் கைத்தறி உற்பத்திப் பொருட்கள், உத்தரபிரதேசத்தின் உலோக சிற்ப வேலைப்பாடுகள் வரை, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின நகைகள், சணல் வேலைப்பாடுகள் என பலதரப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி வருடாந்திர கண்காட்சி மட்டுமல்லாமல் சமூக அடையாளங்களை உலகின் முன் நிறுத்தும் ஒரு இடமாகத் திகழ்கிறது. நாட்டின் மரபுகளை அழகாகவும், சக்தி வாய்ந்ததாகவும் முழுமையாகவும் இந்தக் கண்காட்சி எடுத்துக் காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191954

(Release ID: 2191954) 

***

VL/PLM/KPG/KR


(Release ID: 2192205) Visitor Counter : 7