சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சூரிய மின்சக்தி, எரிசக்தி மாற்றத்திற்கும் சமூகப் புரட்சிக்கும் ஒரு முக்கிய கருவியாக அமையும் – மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்
प्रविष्टि तिथि:
20 NOV 2025 8:06AM by PIB Chennai
பிரேசிலின் பெலெமில் 19.11.2025 அன்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா செயல் திட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் சார்பில், சிறு தீவுக் கூட்டங்களைக் கொண்ட வளரும் நாடுகளில் எரிசக்தி மேம்பாடு தொடர்பான அமர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார். 'தீவுகளை ஒருங்கிணைத்தல், ஊக்கமளிக்கும் நடவடிக்கைகள் - எரிசக்தி பாதுகாப்பில் தலைமைத்துவம்' என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமர்வில் பேசிய அமைச்சர், சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் மூலம் சிறிய தீவுகளை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளதாகக் கூறினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் விரைவான வளரச்சியையும் அவர் எடுத்துரைத்தார். இந்தியா இப்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனில் 500 ஜிகாவாட் என்ற அளவைத் தாண்டியுள்ளது என்று அவர் கூறினார். இந்தியா ஏற்கனவே 50% புதைபடிவமற்ற எரிசக்தித் திறனை எட்டியுள்ளதாகவும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவை விட ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே இந்தியா இந்த இலக்கை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா தற்போது 4-வது பெரிய நாடாகவும், உலக அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் 3-வது இடத்திலும் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் இந்த சாதனைகள் எட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். பிரதமரின் மேற்கூரை சூரிய மின்சக்தி வீடுகள் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை பயன் அடைந்துள்ளதாக திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் சிறு தீவுக் கூட்டங்களைக் கொண்ட வளரும் நாடுகளின் பிரதிநிதிகள் பலர் உரையாற்றினர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிப்பதில் தீவு நாடுகளுக்கு இந்த தளம் உதவும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191917
(Release ID: 2191917)
***
VL/PLM/KPG/KR
(रिलीज़ आईडी: 2192196)
आगंतुक पटल : 23