ஜல்சக்தி அமைச்சகம்
‘நமது கழிப்பறை, நமது எதிர்காலம்’ என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் - உலக கழிப்பறை தினத்தன்று மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தொடங்கியது
Posted On:
20 NOV 2025 9:37AM by PIB Chennai
உலக கழிப்பறை தினமான நேற்று (19-11-2025) ‘நமது கழிப்பறை நமது எதிர்காலம்’ என்ற தலைப்பிலான பிரச்சார இயக்கத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சார இயக்கம் நாடு முழுவதும் தேசிய மனித உரிமைகள் தினமான 2025 டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. கழிப்பறைகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் முறையான பராமரிப்பையும் வலியுறுத்தும் வகையில் இந்த பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது.
இந்த பிரச்சார இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள்
- சமூக பொதுக் கழிப்பறைகள், வீடுகளில் உள்ள தனிநபர் கழிப்பறைகள் ஆகியற்றின் முறையான பராமரிப்பு, தூய்மை ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
- தூய்மை, சுகாதாரம் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்துதல்
- மனிதக் கழிவுகளை பாதுகாப்பாக கையாண்டு அவற்றை பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல்
- முழுமையான தூய்மை தொடர்பான நடவடிக்கைகளில் மக்களின் கூட்டுப் பொறுப்புணர்வை வலியுறுத்துதல்
2014-ம் ஆண்டில் நாட்டில் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து, தூய்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வரையில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சார இயக்கம் பல்வேறு துறைகளுடன் இணைந்து தூய்மையில் சமூக ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கிராம ஊராட்சி, வட்டார நிலையில் தொடர்புடைய அனைத்து துறைகளும் தூய்மை தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் பிரச்சார இயக்கங்களை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191923
(Release ID: 2191923)
***
VL/PLM/KPG/KR
(Release ID: 2192190)
Visitor Counter : 6