வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
உலகக் கழிப்பறை தினம் 2025: சுகாதாரம் மற்றும் கண்ணியத்திற்கான கூட்டுப் பொறுப்பு
Posted On:
19 NOV 2025 5:41PM by PIB Chennai
"சுகாதாரம்: கண்ணியம் மற்றும் பூமிக்கான கூட்டுப் பொறுப்பு" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, 2025-ம் ஆண்டிற்கான உலகக் கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பொறுப்பான கழிப்பறைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ‘டாய்லெட் பாஸ் ஹே’ (Toilet Paas Hai) மற்றும் ‘மேன் சாஃப் ஹி அச்சா ஹூன்’ (Main Saaf Hi Achha Hoon) ஆகிய புதிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது.
சுலப் இன்டர்நேஷனல் மற்றும் உலகக் கழிப்பறை நிறுவனம் இணைந்து நடத்தும் மூன்று நாள் உச்சிமாநாட்டை, மத்திய அமைச்சர்கள் திரு. மனோகர் லால் மற்றும் திரு. சி.ஆர். பாட்டீல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 25 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடியின் 'தூய்மை இந்தியா' இயக்கத்தின் கீழ், 2019-லேயே இந்தியா திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாக (ODF) அறிவிக்கப்பட்டது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இது பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது.
தற்போது ‘தூய்மை இந்தியா இயக்கம் 2.0’ மூலம், இந்தியா திறந்தவெளி கழிப்பறை முறையை ஒழித்து பாதுகாப்பான சுகாதார நிலையை நோக்கி நகர்கிறது. அதாவது, கழிவறை வசதி மட்டுமல்லாமல், கழிவுநீர் மேலாண்மையிலும் கவனம் செலுத்தப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 5.5 கோடி நகரவாசிகள் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளைப் பெற்றுள்ளனர். மேலும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பங்களிப்புடன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான நிலையான சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191751
வெளியிட்டு அடையாள எண்:2191751
***
AD/VK/SH
(Release ID: 2191896)
Visitor Counter : 4