புவி அறிவியல் அமைச்சகம்
கடந்த 11 ஆண்டுகளில் அறிவியல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சிக் கண்டுள்ளது - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பெருமிதம்
Posted On:
19 NOV 2025 5:51PM by PIB Chennai
கடந்த 11 ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சிக் கண்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கு முன்னதாக நாடு தழுவிய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான சவால்கள் என்ற நிகழ்ச்சியைக் காணொலி மூலம் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், டிடெக் எனப்படும் தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சிக் கண்டு வருவதாக கூறினார்.
இந்தியாவில் இதுவரை 6,000 பிடெக் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், உயிரிப் பொருளாதார வளர்ச்சி 14 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் முதலீடுகள் இரட்டிப்பாகியுள்ளதாகவும் தெரிவித்தார். விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் வாயிலாக 8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விண்வெளித்துறைச் சார்ந்த பொருளாதார வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக அவர் கூறினார். முதலாவது தேசிய குவாண்டம் கம்ப்யூட்டிங் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து இத்துறையில் புத்தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தற்சார்பு இந்தியாவுக்கான அறிவியல் துறையின் வளர்ச்சி என்ற கருப்பொருளில் அடுத்த மாதம் 6-ம் தேதி இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா தொடங்க உள்ளதாக இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191756
***
AD/SV/KPG/SH
(Release ID: 2191822)
Visitor Counter : 8