தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் 1600 என்ற வரிசை எண்ணை படிப்படியாக அமல்படுத்துமாறு ட்ராய் அறிவுறுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
19 NOV 2025 2:48PM by PIB Chennai
இந்திய ரிசர்வ் வங்கி. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் போன்ற அமைப்புகளின் கீழ், செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி எண்களில் 1600 என்ற வரிசை எண்ணை படிப்படியாக அமல்படுத்துவதை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. இது தொடர்பாக ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் நம்பிக்கையை மேம்படுத்துவது போலியான அழைப்புகளைத் தடுப்பது, குரல் அழைப்புகளின் மூலம் மோசடி நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பது போன்ற அம்சங்களை நோக்கமாகக் கொண்டு இத்தகைய அறிவுறுத்தலை ட்ராய் வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள இந்த எண் வரிசையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக அமல்படுத்தும் முயற்சியில் ட்ராய் மேற்கொண்டு வருகிறது.
இதர வர்த்தக தகவல்கள் மற்றும் பரிவர்த்தனை அழைப்புகளிலிருந்து அரசு நிறுவனங்களின் தொலைத்தொடர்பு அழைப்புகளை வேறுபடுத்திக் காட்டும் வகையில் இந்த எண் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191647
***
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2191801)
आगंतुक पटल : 5