PIB Headquarters
கழிவிலிருந்து செல்வம்: துப்புரவு பணிகளின் செயல்பாடுகள்
Posted On:
19 NOV 2025 2:15PM by PIB Chennai
பொது சுகாதாரம், கண்ணியமான வாழ்வு மற்றும் நீடித்த சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான கழிப்பறைகள் பயன்பாடு மற்றும் முறையான துப்புரவு பணிகள் அவசியமாக உள்ளது. துப்புரவு பணிகளை மேம்படுத்துவதன் மூலம் நீரால் ஏற்படும் நோய்களைக் குறைப்பதற்கும் பாதுகாப்பான சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் உதவுகிறது. துப்புரவு நடவடிக்கைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதுடன் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் சிறந்த கல்விக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. இன்றைய சகாப்தத்தில் பருவநிலை மாற்றம், விரைவான நகர்ப்புற விரிவாக்கம், சமத்துவமின்மை ஆகியவற்றை எதிர்கொள்வதில் பாதுகாப்பான துப்புரவு பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் மனிதனின் கண்ணியம், சமுதாய நலன் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
உலகக் கழிப்பறை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் 19-ம் தேதி உலக அளவில், துப்புரவு மற்றும் பாதுகாப்பான கழிப்பறை பயன்பாட்டின் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டில் இதனை ஐ நா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது. கழிப்பறைகளின் பயன்பாடு, சுகாதாரம், கண்ணியமான வாழ்வு, சமத்துவம் மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் உலக அளவில் தூய்மையான குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளை அனைவரும் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை இந்தியா இயக்கம் குறித்து ஐநா சபையின் யுனிசெப் போன்ற பல்வேறு அமைப்புகளால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. இது உலக அளவில் மிகப் பெரிய இயக்கமாக இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற தேசிய அளவிலான செயல்பாடுகள் உலக அளவிலான தூய்மை இயக்கத்திற்கான இலக்குகளை எட்ட எவ்வாறு பங்களிக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191618
***
AD/SV/KPG/SH
(Release ID: 2191800)
Visitor Counter : 7