தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பை நிலைநிறுத்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு அவசியம்- மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் திரு சந்திரசேகர் பெம்மசானி
प्रविष्टि तिथि:
19 NOV 2025 11:02AM by PIB Chennai
உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பை நிலைநிறுத்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு அவசியம் என்று மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் திரு சந்திரசேகர் பெம்மசானி தெரிவித்துள்ளார். அசர் பைசானில் உள்ள பகுவில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய அவர், நாட்டின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் திறன் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்தார். கலாச்சார பரிமாற்றத்திலும் முதலீடுகளை உருவாக்குவதிலும் அவர்கள் பெரும் பங்கு வகிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவங்கள், சுற்றுலாத்துறை, சரக்கு வர்த்தகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் 380 பல்கலைக்கழக மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்தியா அஜர்பைஜான் சங்கம், அஜர்பைஜான் தெலுங்கு சங்கம், பகு தமிழ்ச் சங்கம் மற்றும் அசர்பைசான் இந்திய மாணவர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை இது எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்று இணையமைச்சர் திரு சந்திரசேகர் பெம்மசானி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191527
**
AD/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2191597)
आगंतुक पटल : 13