சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
குடும்பம், சமூகம், நாட்டை கட்டமைப்பதில் மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர் - மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார்
Posted On:
18 NOV 2025 2:55PM by PIB Chennai
பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007 குறித்த சிறப்பு அமர்வு புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது. தேசிய சட்ட சேவை ஆணையத்துடன் இணைந்து சமூகநீதி மன்றம் அதிகாரமளித்தல் துறை இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. மூத்த குடிமக்களின் சட்ட உரிமைகள், அவர்களுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை அமல்படுத்துவதில் தனிநபர் மற்றும் சமூக நிலையிலான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்காக இந்த சிறப்பு அமர்வு நடைபெற்றது.
மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்ட கட்டமைப்பை பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007 வழங்கியுள்ளது. இந்த அமர்வில் உரையாற்றிய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், மூத்த குடிமக்கள் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டை கட்டமைப்பதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக கூறினார். நமது நாட்டின் வேர்கள் தற்போதைய மூத்த குடிமக்களின் முயற்சிகளில் உள்ளதாக குறிப்பிட்டார். இந்திய பாரம்பரியத்தின் கூட்டுக்குடும்ப மதிப்பு முறையின் முக்கியத்துவம் குறித்தும் நாட்டின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் மேம்பாட்டில் அது ஆற்றிய பங்களிப்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191178
***
SS/IR/RK/SH
(Release ID: 2191321)
Visitor Counter : 6