சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கு இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்
Posted On:
18 NOV 2025 1:24AM by PIB Chennai
பிரேசிலின் பெலேம் நகரின் 2025 நவம்பர் 17 அன்று நடைபெற்ற பருவநிலை மாற்றத்திற்கான ஐநா கட்டமைப்பு மாநாட்டின் போது, தொழில்துறை மாற்றத்திற்கான தலைமை தூதர் குழும உறுப்பினர்கள் கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார். பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஒருங்கிணைந்த, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் நீடித்த தொழில்துறை மாற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.
உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் உறுதியான தருணத்தில் இம்மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டார். பாரீஸ் ஒப்பந்தத்தின் 10-ம் ஆண்டு காலத்தின் முக்கிய தருணத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருவதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மீட்பு, உயிரி பன்முகத்தன்மை பாதுகாப்பு, தொழில் துறையில் தலையீடு ஆகியவற்றை உள்நாடு, பிராந்தியம் மற்றும் உலகளவில் பரப்புவதற்கான லட்சியமிக்க முன்முயற்சிகளை இந்தியா தொடர்ந்து முன்னெடுத்து செல்வதாக கூறினார்.
மேம்பட்ட குறைந்த அளவிலான கார்பன் வெளியீடு தொழில்துறை வழிவகைகளில் தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவ குழுமம் மிகவும் அர்த்தமுள்ள உலகளாவிய ஒருங்கிணைப்பாக திகழ்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இது தொடங்கப்பட்டது முதல் அதன் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 18 ஆகவும், நிறுவனங்களின் எண்ணிக்கை 27 ஆகவும் அதிகரித்து உலகளாவிய பருவநிலை திட்டமிடலில் தொழில் துறை மாற்றத்தை வெற்றிகரமாக உயர்த்தி உள்ளது என்றும் மாற்றத்திற்கான வழிவகைகள் உலகளாவிய கார்பன் வெளியீடு குறைப்பிற்கான முயற்சிகளில் வெளிப்படை தன்மையை மேம்படுத்துதல், அறிவு சார் பரிமாற்றத்திற்கான தளங்களை கட்டமைத்தல் ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2005-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டிற்கிடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கார்பன் வெளியீட்டை இந்தியா 36 சதவீதம் குறைத்துள்ளதாகவும் திரு பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191066
***
SS/IR/RK/KR
(Release ID: 2191162)
Visitor Counter : 7