குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் புதுதில்லியில் ரோட்டரி தேஜஸ் - மாற்றத்தின் சிறகுகள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 14 NOV 2025 6:37PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர்  திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று புதுதில்லியின் யஷோபூமியில் ரோட்டரி தேஜஸ் - மாற்றத்தின் சிறகுகள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். 2025 நவம்பர் 14 முதல் 16 வரை நடைபெறும் இந்த நிகழ்வில், இந்தியா முழுவதிலுமிருந்து 1,400-க்கும் மேற்பட்ட ரோட்டரி தலைவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் மதிப்புமிக்க விருந்தினர்கள் ஒன்றிணைந்து ரோட்டரியின் சேவை மற்றும் மனிதாபிமானத்திற்கான உறுதிப்பாட்டைக் கொண்டாடுகிறார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசால் முன்னெடுக்கப்படும் முன் எப்போதும் இல்லாத வாய்ப்புகள் மற்றும் புதுமைகளின் ஒரு முக்கிய கட்டத்தில் இந்தியா உள்ளது என்பதை வலியுறுத்தினார். இந்தப் பயணத்தில், நிர்வாகத்திற்கும் ரோட்டரி போன்ற குடிமக்கள் தலைமையிலான முயற்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, உள்ளடக்கிய, நிலையான மற்றும் மனிதாபிமான வளர்ச்சிக்கு ஒரு மூலக்கல்லாக அமைகிறது என்றார்.

ரோட்டரியின் மனிதாபிமான பணிகளை மேம்படுத்துவதில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு  முயற்சிகளின் ஒருங்கிணைந்த பங்கையும் திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். வளர்ச்சி என்பது அரசுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டுப் பொறுப்பு என்றும், குடிமக்கள், சமூகக் குழுக்கள் மற்றும் பெருநிறுவன கூட்டாளர்களின் தொடர்ச்சியான முயற்சிகள், நாட்டின் தார்மீக மற்றும் சமூக மூலதனத்தை உருவாக்குகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார். தூய்மை இந்தியா, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்  மற்றும் இல்லம் தோறும் குடிநீர்  போன்ற முக்கிய தேசிய இயக்கங்களில் ரோட்டரியின் தீவிர ஈடுபாட்டை அவர் பாராட்டினார்.

இந்தியா முழுவதும் திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்கான புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம், முன்னேற்றம் மற்றும் புதுமையின் முன்னோடிகளாக தங்கள் பங்கைத் தொடருமாறு ரோட்டரி உறுப்பினர்கள் அனைவரையும் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார். பல்வேறு நபர்களை ஒரு பொதுவான நோக்கத்துடன் ஒன்றிணைக்கும் ரோட்டரியின் தனித்துவமான திறன், அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குவதில் அதன் செயல்திறனை வளப்படுத்துகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190150

***

SS/RB/RJ


(रिलीज़ आईडी: 2190633) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam