குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியர் எவரும் பின்தங்கிவிடக் கூடாது என்ற நோக்கில், தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
प्रविष्टि तिथि:
14 NOV 2025 6:55PM by PIB Chennai
புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற இந்தியத் தொலைத்தொடர்பு சேவையின் வைர விழா கொண்டாட்டங்களில் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
தந்தி மற்றும் தரைவழி தொலைபேசி இணைப்புகளின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று தேசத்தை இயக்கும் விரிவான மற்றும் புதுமையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வரை, கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் தொலைத்தொடர்பு சூழலை வடிவமைத்த ஐடிஎஸ்-ன் மாற்றத்திற்கான பயணத்தை குடியரசு துணைத் தலைவர் எடுத்துரைத்தார்.
முன்னேற்றத்தை ஊக்குவிக்கும், இணைப்பை வளர்க்கும் மற்றும் நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு அமைதியான, அதேவேளை, முக்கியமான சக்தியாக ஐடிஎஸ்-ன் பங்களிப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், வலுவான உள்கட்டமைப்பு விரிவாக்கம், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுடன் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை கொண்டு இந்த துறை வளர்ந்துள்ளது என்று அவர் கூறினார். பிஎஸ்என்எல்-ன் ஏகபோக நாட்களில் இருந்து போட்டி மற்றும் துடிப்பான ஒரு சந்தையாக, வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சூழலியல், சிறந்து விளங்குவதற்கும், பொது நலனுக்கும் சேவையின் நீடித்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகையில், 5ஜி மற்றும் 6ஜி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் இணைப்பின் எதிர்காலத்திற்கு இந்தியாவைத் தொடர்ந்து வழிநடத்துமாறு இந்தியத் தொலைத்தொடர்பு சேவையை குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், எந்த குடிமகனும் பின்தங்கியிருக்கக்கூடாது என்றும், தொலைத்தொடர்பு தரநிலைகள் மற்றும் புதுமைகளில் இந்தியாவை உலகளாவிய தலைமையாக நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190161
***
SS/RB/RJ
(रिलीज़ आईडी: 2190632)
आगंतुक पटल : 4