PIB Headquarters
azadi ka amrit mahotsav

கருத்துரிமையையும், ஜனநாயகத்தையும் வலுப்படுத்தும் தேசிய பத்திரிகை தினம்

Posted On: 16 NOV 2025 10:47AM by PIB Chennai

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய பத்திரிகை கவுன்சில் சட்டம் - 1965-ன் கீழ், 1966-ம் ஆண்டு இந்திய பத்திரிகைக் கவுன்சில் நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நமது சமூகத்தில் சுதந்திரமான, பொறுப்பான பத்திரிகைகளின் அத்தியாவசிய பங்கை மதிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று குறிப்பிடப்படுகின்றன. பொதுக் கருத்தை வடிவமைப்பதிலும், வளர்ச்சியை அதிகரிப்பதிலும், அதிகார மையங்களை கேள்வி கேட்பதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. முன்னேற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக, பத்திரிகைகள் உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதிலும் ஊடகங்கள் முன்னணியில் உள்ளன.

நாட்டில் பதிவுசெய்யப்பட்ட பத்திரிகை வெளியீடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2004-05-ம் ஆண்டில் இது 60,143 ஆக இருந்த நிலையில் 2024-25-ம் ஆண்டில் 1.54 லட்சமாக உயர்ந்துள்ளது . பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சட்டம் -1955, பத்திரிகை, பருவ இதழ்கள் பதிவு சட்டம்- 2023 போன்றவற்றின் மூலம், பத்திரிகையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. நாட்டில் செயல்படும் செய்தித்தாள் பதிவாளர் அலுவலகம் எனப்படும் ஆர்என்ஐ, பத்திரிகை, பருவ இதழ்கள் பதிவுச் சட்டத்தின் படியான ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக செயல்படுகிறது.

பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய பத்திரிகை விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை தினத்தன்று வழங்கப்படும் இந்த விருதுகள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களை கௌரவித்து அவர்களை அங்கீகரிக்கின்றன. மதிப்புமிக்க ராஜா ராம் மோகன் ராய் விருது மிக உயர்ந்த கௌரவமாகும்.

இந்திய பத்திரிகையாளர் மன்றம், ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது பத்திரிகையாளர் மன்றச் சட்டம்- 1978-ன் கீழ், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், செய்தி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் செயலாற்றி வருகிறது. பத்திரிகை சுதந்திரம்  தொடர்பான பிரச்சினைகள் குறித்த விஷயங்களில் இந்த அமைப்பு தானாக முன்வந்து விசாரணை செய்ய அதிகாரம் பெற்றுள்ளது.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை இந்த நாள் நினைவூட்டுகிறது. தேசத்திற்கு தகவல் அளிப்பதற்கும் கல்வி கற்பிப்பதற்கும் ஊடகங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் நாளாக இது அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190470

https://mib.gov.in/sites/default/files/2024-10/annual-report-2023-24-english.pdf

https://mib.gov.in/flipbook/93

https://iimc.gov.in/overview

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150335

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2008020

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122945

https://eparlib.sansad.in/bitstream/123456789/1931749/1/AU2115.pdf

https://eparlib.sansad.in/bitstream/123456789/951492/1/AS110.pdf

https://sansad.in/getFile/annex/260/AU90.pdf?source=pqars

https://www.presscouncil.nic.in/ResumeOfPCI.aspx

https://prgi.gov.in/what-we-were

https://prgi.gov.in/about-us/prp-act-2023

https://prgi.gov.in/about-us/history/   

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153422&ModuleId=3

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1705414®=3&lang=1     

https://accreditation.pib.gov.in/jws/guidelines_english.pdf

***

(Release ID: 2190470)

SS/PLM/RJ


(Release ID: 2190599) Visitor Counter : 6