மக்களவை செயலகம்
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பகவான் பிர்சா முண்டாவின் சிலைக்கு குடியரசுத்தலைவர், குடியரசு துணைத் தலைவர், மக்களவைத் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்
Posted On:
15 NOV 2025 4:11PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு சி பி ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரேர்ணா ஸ்தலில் உள்ள பகவான் பிர்சா முண்டாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடி மக்களின் அடையாளமாக உள்ள தார்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150 - வது பிறந்த தினத்தில் அவருக்கு பணிவான மரியாதை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறைவான வளங்கள் இருந்தபோதிலும், நீர், வனம் மற்றும் நிலத்திற்கான உரிமைகளுக்காக அவர் நடத்திய துணிச்சலான போராட்டம் அந்நிய ஆட்சிக்கு எதிரான ஒளிவீசும் புரட்சியாக உருவெடுத்து, நாடு முழுவதும் மக்களிடையே சுதந்திர உணர்வை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார். விளிம்பு நிலை மற்றும் பழங்குடியின சமூகங்களின் குரலாகவும், கொள்கையில் உறுதியான நிலைப்பாடு, தியாகம் மற்றும் பிரத்யேகத் தலைமைத்துவப் பண்பு ஆகியவற்றின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே நாட்டுப்பற்று, சுயமரியாதை மற்றும் நீதியின் மகத்துவத்தை அறிந்துகொள்ளச் செய்தார்.
அவரது உறுதியான கடமையுணர்வு, சமூக நீதி மற்றும் கலாச்சார உணர்வின் கண்ணியமான பாதையை நம் அனைவருக்கும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்றும், பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவரது சேவை என்றென்றும் நினைவுகூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190320
***
SS/SV/SH
(Release ID: 2190379)
Visitor Counter : 6