குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

“இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம்”: விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 30-வது சிஐஐ கூட்டாண்மை உச்சிமாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பேச்சு

Posted On: 14 NOV 2025 3:54PM by PIB Chennai

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற 30-வது இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) கூட்டாண்மை உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் குடியரசு துணைத் தலைவர் திரு  சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய நட்புநாடுகள் உட்பட 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் துரிதப்படுத்தப்பட்ட தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை சுட்டிக் காட்டினார்.

கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனை என்றும், செல்வத்தையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் நிலையான பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டுவதன் மூலம் இது சாத்தியமானது என்றும் திரு சி பி ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.

நாட்டில் மிகவும் சாதகமான வணிகச் சூழல்களில் ஒன்றை உருவாக்கியதற்காக முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் நிலையை குடியரசு துணைத் தலைவர்  விரிவாக விளக்கினார்.  ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருவதால், வணிகம் செய்வதற்கான எளிமை இந்தியாவில் சிறப்பாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்று அவர் கூறினார். இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த உச்சிமாநாடு தொழில்நுட்பம், நம்பிக்கை மற்றும் வர்த்தகத்தை முன்னேற்றுவதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்ப்பதற்கும், இந்தியாவை உலகளாவிய பொருளாதாரத் தலைவராக நிலைநிறுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாக செயல்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190021

***

SS/PKV/AG/SH


(Release ID: 2190193) Visitor Counter : 8