நிதி அமைச்சகம்
நிதி சேவைகள் துறை செயலாளர் தலைமையில் காப்பீட்டாளர்கள் மற்றும் சுகாதார வழங்குநர்களின் கூட்டம்
Posted On:
14 NOV 2025 12:19PM by PIB Chennai
மருத்துவ பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் குறித்து விவாதிக்க நிதி சேவைகள் துறை செயலாளர் திரு எம் நாகராஜு தலைமையில் 13.11.2025 அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது.
இந்திய பொது காப்பீட்டு கவுன்சில், இந்திய சுகாதார வழங்குநர்கள் சங்கம் , மேக்ஸ் ஹெல்த்கேர், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அப்பல்லோ மருத்துவமனை, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற காப்பீட்டு நிறுவனங்களின் சுகாதாரத் துறை பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேசிய சுகாதார உரிமைகோரல் பரிமாற்றத்தை விரைவுபடுத்துதல், தரப்படுத்தப்பட்ட சிகிச்சை நெறிமுறைகளை உருவாக்குதல், பொதுவான உரிமைகோரல் விதிமுறைகள், தடையற்ற பணமில்லா உரிமைகோரல் செயலாக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு காப்பீட்டாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செயலாளர் அறிவுறுத்தினார்.
மேலும், அனைத்து காப்பீட்டாளர்களிடமும் தரப்படுத்தப்பட்ட மருத்துவமனை உரிமைகோரல் விதிமுறைகள் இருப்பது பாலிசிதாரர்களுக்கு நிலையான பணமில்லா அணுகலை உறுதி செய்யும். சேவை விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதுடன், செயல்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்தும். மருத்துவமனைகள் மீதான நிர்வாகச் சுமையைக் குறைக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.காப்பீட்டு நிறுவனங்கள், பாலிசிதாரர்களுக்கு மிக உயர்ந்த தரமான சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்,
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189922
***
SS/PKV/AG/SH
(Release ID: 2190154)
Visitor Counter : 6