கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
நியூ மங்களூரு துறைமுகப் பொன்விழா: ரூ.1,500 கோடி திட்டங்களை திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்
Posted On:
13 NOV 2025 8:33PM by PIB Chennai
மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மங்களூருவில் நடைபெற்ற நியூ மங்களூரு துறைமுக ஆணையத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். இந்தியாவின் முன்னணி கடல்சார் நுழைவாயில்களில் ஒன்றாக 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கொண்டாட்டத்தின்போது, 16 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் 113 சமூகப் பொறுப்புத் திட்டங்கள் உட்பட மொத்தம் ரூ.1,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை துவக்கிவைத்த அவர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ் நியூ மங்களூரு, துறைமுக ஆணையத்தின் ஒரு பிராந்திய நுழைவாயிலில் இருந்து உலகளவில் போட்டியிடும் கடல்சார் மையமாக மாறியுள்ளது என்றார். சமீபத்திய இந்தியா கடல்சார் வாரத்தில் கையெழுத்தான ரூ.12 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், இதன் பங்கு மட்டும் ரூ.52,000 கோடி என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், அவர் புதுப்பிக்கப்பட்ட மங்களூரு கடல்சார் கல்லூரி மற்றும் ரூ.9.51 கோடி மதிப்பிலான கடல்சார் வணிகத் துறை அலுவலகக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார். மங்களூரு கடல்சார் கல்லூரி போன்ற நிறுவனங்கள் ‘திறன் இந்தியா’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ உணர்வுகளுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளன எனப் பாராட்டினார்.
1975-ல் 90,000 டன் சரக்குகளுடன் தொடங்கப்பட்ட நியூ மங்களூரு துறைமுகம் , தற்போது 46 மில்லியன் டன் சரக்குகளை ஆண்டுதோறும் கையாளுகிறது. 204-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் இலக்கை அடைய இத்துறைமுகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189852
***
SS/VK/SH
(Release ID: 2189876)
Visitor Counter : 4