கூட்டுறவு அமைச்சகம்
தில்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
13 NOV 2025 5:35PM by PIB Chennai
குஜராத்தில் மோதிபாய் ஆர் சவுத்ரி சாகர் ராணுவப் பள்ளி மற்றும் சாகர் இயற்கை ஆலையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திரு அமித் ஷா, தில்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
இந்த பயங்கரவாத செயலில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாடு நிச்சயம் நிறைவேறும் என்று தெரிவித்தார். தில்லியில் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை நமது நாட்டின் மீது இது போன்ற தாக்குதலை நடத்துவது குறித்த சிந்தனை ஏற்படாத வகையில், உலகிற்கான செய்தியாக இருக்கும் என்று கூறினார்.
மோதிபாய் ஆர் சவுத்ரி குறித்து குறிப்பிட்ட அவர், அவரது வாழ்க்கை நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகிய மகாத்மா காந்தியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் தெரிவித்தார். அக்காலத்தில் குஜராத்தின் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் கிராமங்களின் செழுமைக்காக அனைத்து மக்களும் வெளிப்படையாக பணியாற்றினார்கள் என்று அவர் தெரிவித்தார்.
மோதிபாய் ஆர் சவுத்ரி சாகர் ராணுவப் பள்ளியில் பயிலும், மாணவர்களுக்கு இந்திய ஆயுதப் படையில் பணியாற்றுவதற்கான வழிவகைகள் ஏற்படும் என்று திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189731
***
SS/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2189800)
आगंतुक पटल : 43