வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஏசி, எல்இடி விளக்குகளின் உபகரணங்கள் தயாரிக்க 13 நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளன
प्रविष्टि तिथि:
13 NOV 2025 11:18AM by PIB Chennai
உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் 4-வது சுற்றில் ரூ.1,914 கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து ஏசி மற்றும் எல்இடி விளக்குகளின் உபகரணங்கள் தயாரிக்கும் 13 நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளன. தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை இதற்கான விண்ணப்பங்களை 2025 செப்டம்பர் 15 முதல் நவம்பர் 10 வரை பெற்றது.
புதிய விண்ணப்பதாரர்களின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 13 விண்ணப்பதாரர்களில் ஒருவர் ஏற்கனவே உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டப்பயனாளி ஆவார். இவர் தற்போது கூடுதலாக 15 கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒன்பது விண்ணப்பதாரர்கள் ரூ.1,816 கோடி முதலீட்டில் ஏசியின் உபகரணங்களை உற்பத்தி செய்ய விண்ணப்பித்துள்ளனர். மற்ற நான்கு விண்ணப்பதாரர்கள் எல்இடி விளக்குகளின் உபகரணங்களை ரூ.98 கோடி முதலீட்டில் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏசி மற்றும் எல்இடி விளக்குகள் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ரூ.10,335 கோடி முதலீட்டுடன் 80 பயனாளிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ.1.72 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி நடைபெறும் என்றும் நாடு முழுவதும் சுமார் 60,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189520
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2189685)
आगंतुक पटल : 23